கோவை: டெல்லி புறப்பட்ட அண்ணாமலை கோவையில் தேர்தல் கூட்டணி, SIR பற்றி பல்வேறு விஷயங்கள் பற்றி பேட்டியளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில்
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பபட்டது, அதற்கு பதில் அளித்த அவர், நாளையுடன் எஸ்ஐஆர் பணிகள் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், எங்கள் தேசிய தலைவர் கூட்டத்தை கூட்டி இருக்கின்றார் எனவும், 12 மாநிலங்களுக்காக அந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறார், அதில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கின்றேன் எனவும் அத்துடன்
காசி தமிழ் சங்கத்திலும் கலந்து கொள்ள செல்கிறேன் என தெரிவித்தார்.
மேலும் ஓ.பி.எஸ் அமைப்பின் நிர்வாகி குடும்ப விழாவிற்கு சென்று இருந்தேன், அங்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தேன் என தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைக்கின்றீர்களா ? என்ற கேள்விக்கு,
கட்சியில் மாநில தலைவர் நயினார் இருக்கிறார், டெல்லியில் தலைவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்த அண்ணாமலை,
அவர்கள் கூட்டணியில் இருக்கின்றனர்,
இல்லை என்பதை தாண்டி அவர்களுடன் நட்பை தொடர வேண்டும் என நினைக்கின்றேன்,
பரஸ்பர அன்பு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு,
செங்கோட்டையன் அரசியல் பாரம்பரியம் கொண்டவர், நிறைய கள அரசியலைப் பார்த்தவர், நிறைய முறை வெற்றி பெற்றவர் , யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், இன்னொரு இடத்திற்கு போய்விட்டார் என்பதற்காக தவறாகவும் பேச வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
செங்கோட்டையன் அவர்களுடைய கட்சியை பற்றி பெருமையாக பேசுவார், அது அவர்கள் கருத்தாக பார்க்க வேண்டும் எனவும், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார். களச்சூழல் , ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் போன்ற பல காரணங்களால்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
SIR ல் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை வாக்காளர் பட்டியலில் நீக்கம் இருக்கும் என நினைக்கிறோம் என தெரிவித்த அவர்,
இறந்து போனவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என இருக்கும் பொழுது இந்த அளவு நீக்கம் வர வேண்டும் என, டிசம்பர் 11ம் தேதிக்குள் தகவல் வரும், டிசம்பர் 20ம் தேதிக்குள் ஒரு முழுமையான வடிவம் கிடைக்கும் அதன் பின்பு இதில் நிறைய பணிகள் இருக்கும் என தெரிவித்தார். இது தொடர்பான மீட்டிங்தான் டெல்லியில் நடக்கிறது என தெரிவித்தார்.
குறிப்பாக சென்னையில் உள்ள தொகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டிய ஓட்டுகள் இருக்கிறது எனவும், இது தமிழக தேர்தல் களத்தை நிச்சயமாக மாற்றும் எனவும் தெரிவித்தார். ஒரு கோடி வாக்குகள் நீக்கம் என்பது நிச்சயம் 12 முதல் 13 சதவீதம் வரை இருக்கின்றது எனவும், தமிழகத்தில் நீக்கம் 10 சதவீதத்தை தாண்டும் பொழுது இந்த பட்டியலை வைத்து தான் கடந்த தேர்தல்களை சந்தித்தோம் என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைய இன்னும் நேரம் இருக்கிறது, தேர்தல் சூடு இன்னும் இல்லை எனவும்,மிக வலிமையான கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி எங்கு பேசுகிறார்கள், என்ன செய்கின்றார்கள் என தெரியவில்லை எனவும்,
விஜயிடம் போகிறார்கள், தி.மு.க விடம் பேசுகின்றார்கள் என்று சொல்கின்றனர், காங்கிரசை பொருத்தவரை மக்கள் அதை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை 2025-ல் 25 சீட்டுக்கு வந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு 35 சீட் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டதா? என கேள்வி எழுப்பிய அவர், தோல்வியின் முகமாகத் தான் காங்கிரஸ் இருக்கிறது எனவும், தமிழகத்தில் 60 சீட்டில் ஆரம்பித்த காங்கிரஸ் இப்போது 25 சீட்டில் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்த வரை வர வேண்டியவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், இன்னும் இரண்டு மாத காலம் இருக்கிறது, பக்குவமாக நகர்த்திச் செல்ல வேண்டும் எனவும் இந்த கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை பொருத்த வரை மக்களவையில் திமுக எம்.பிகள் , நீதிபதி சாமிநாதன் மீது இம்பீச்மென்ட் மோசனுக்கு போட கையெழுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனவும், நீதிபதி சுவாமிநாதன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தண்டனை கொடுக்கவில்லை, லஞ்ச லாவண்யத்தில் இல்லை என கூறினார்.
அவரது ஒரு தீர்ப்பு திமுகவிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக இம்பீட்ச்மென்ட் மோஷன் கொண்டு வருவோம் என்று கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த அவர் அவர்களுக்கு எதிர்பார்த்த கையெழுத்து கிடைக்காது என தெரிவித்த அவர், ஒரு தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவரை நாங்கள் நீக்குவோம் என்றால் ,மற்ற நீதிபதிகளை அச்சுறுத்துவது போலதான் என தெரிவித்தார்.
தி.மு.க மூத்த தலைவர்களின் லஞ்ச வழக்குகள் பல இடங்களில் இருக்கிறது, இதை வைத்து அவர்களை மிரட்டுகின்றார்களா ?
தமிழகத்தில் உள்ள மற்ற நீதிபதிகளை தி.மு.க மிரட்டி பார்க்கின்றார்களா என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் வெளியில் வருவது குறித்த கேள்விக்கு, யாருடைய நிகழ்வாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும், இன்னொரு முறை தவறாக நடந்தால் அரசியல் மீதே மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள், காவல்துறை கண்ணியமாக இதை நடத்துவார்கள் என நினைக்கிறோம் எனவும் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம், இன்னும் இரண்டு மாத காலம் இருக்கிறது, மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் எனவும், மோடியின் மீது நம்பிக்கை, வலிமையான கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி இதற்கு முன்பு முதல்வராக இருந்திருக்கிறார்.
இதெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக
முதலமைச்சருக்கு எஸ்.ஐ.ஆர்யை சக்சஸ் செய்து காட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதாக பார்க்கின்றோம் என தெரிவித்தார்.



