மரியாதைக்கு கூட கேட்பதில்லை; லிஸ்ட் போட்டு வைரமுத்து குமுறல்!

சென்னை: தனது பல்லவிகளை படத்தலைப்பாக பயன்படுத்துபவர்கள் மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை என்று பாடலாசிரியர் வைரமுத்து குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

ஒன்றா இரண்டா…

பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,
பனிவிழும் மலர்வனம்,
வெள்ளைப் புறா ஒன்று,
பூவே பூச்சூட வா,
ஈரமான ரோஜாவே,
நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம்,
மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே,
என்னவளே, உயிரே,
சண்டக்கோழி,
பூவெல்லாம் கேட்டுப் பார்,
தென்மேற்குப் பருவக்காற்று,
விண்ணைத் தாண்டி வருவாயா,
நீ தானே என் பொன் வசந்தம்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
தங்கமகன்

இப்படி இன்னும் பல…

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை

செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்

ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது

ஆனால், என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?

இவ்வாறு வைரமுத்து தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வைரமுத்துவுக்கு உயரிய விருது.. கமல்ஹாசனை வம்புக்கு இழுத்த சின்மயி!

இந்தியாவிலேயே இலக்கியத்தில் உயரிய விருதான ஞானபீடம் விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சின்மயி அவரை வசைபாடியுள்ளா ர். தமிழுக்கு பெருமை சேர்த்த வைரமுத்து அகிலன், ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக இந்த விருது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு...

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...