கோவையில் வாகன ஸ்டண்ட் நிகழ்ச்சி…

கோவை: கோவையில் ரேஸ்களுக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேக கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் ஸ்டண்ட் நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்படைய செய்தது.

கோவையில் ஆண்டுதோறும் கோவை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கோவை விழா கடந்த 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் ரேஸ்களுக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேக வாகனங்களின் ஸ்டண்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகத்தர அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஃபார்முலா 4 ரேஸ் கார்,ஹை பவர் ரேஸ் கார்,பைக் ஸ்டண்ட் என மூன்று வகை காட்சிகள் தத்ரூபமாக செய்து காட்டினர்.இதில் ஸ்கிட், ட்ரிஃப்ட், ஹை-ஸ்பீடு ரன்கள் போன்ற ஸ்டண்ட்கள் பார்வையாளர்களை வியப்படைய செய்தது .

இத்தகைய ஸ்டன்களை, பொதுச்சாலைகளில் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது எனவும், சரியான ஓட்டுதல், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து விதிகள் அவசியம் என ஸ்டண்ட் நிபுணர்கள் வலியுறுத்தினர்.

Recent News

Video

Join WhatsApp