கோவை: பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிடி மேம்பாலத்தில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் பகுதி வரை சுமார் 10.10 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பால சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதனிடையே, இந்த பாலத்தின் இரு பகுதிகளையும் (உப்பிலிபாளையம், கோல்டு வின்ஸ்) நேற்றிரவு இரவு 9 மணி அளவில் போலீசார் தடுப்பு வைத்து அடைத்தனர்.
இதனால் உப்பிலிபாளையம் முதல் லட்சுமி மில்ஸ் பகுதி வரை அவிநாசி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், புதிதாக இந்த பாலம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வம் மிகுதியில் இரவு நேரங்களில் வந்து ஆரவாரம் செய்ய வருகிறார்கள்.
இளைஞர்களிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் பாலத்தின் நடுப்பகுதி வரை சென்று புகைப்படம், செல்பி எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவர்.
இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் இந்த புது மேம்பாலம் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை அடைக்கப்படும்.
இந்த நடைமுறை ஒரு வாரத்துக்கு பின்பற்றப்படும். என்றனர்.





