வெனிசுலா அதிபர் கைது- ட்ரம்ப்பை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: வெனிசுலா அதிபர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

அண்மையில் அமெரிக்க அரசு வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தது. வெனிசுலாவில் இருந்து அதிகமான போதைப் பொருட்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெனிசுலா அதிபரை கைது செய்ய உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வெனிசுலாவின் வெனிசுலாவின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காகவே ட்ரம்ப் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்தும் ட்ரம்பை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இது குறித்து பேட்டி அளித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளர் பாலமுருகன், வெனிசுலாவின் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காகவே அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கும் மனித குலத்திற்கும் எதிரான குற்றங்களை செய்து வருவதாக தெரிவித்தார். வெனிசுலாவிற்கு நடந்த பாதிப்பு நாளை இந்தியா போன்ற நாடுகளுக்கும் வரும் என தெரிவித்தார்.

இந்தியாவை அமெரிக்கா பல்வேறு வகைகளில் வஞ்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும் எனவும் ஆனால் இதுவரை பிரதமர் அதுபோன்ற எந்த ஒரு கண்டன அறிவிப்பையும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் அமெரிக்காவிற்கு எதிராகவே அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

Recent News

Video

Join WhatsApp