கோவை: தவெக தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே இன்று தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்காக காலை 11 மணி முதல் 1 மணி வரை போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக இன்று காலை 9 மணியளவில் அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
விஜய் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது
50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் வாயிலில் பேரி கேட்டுகள் அமைக்கப்பட்டு கயிறுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்புகளை தாண்டி விஜய்யைக் காண வரும் ரசிகர்களும், தொண்டர்களும் நிற்பதற்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

