விநாயகர் சதுர்த்தி பண்டிகை- கோவை புலியகுளம் விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம்

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு நான்கு டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

அதன்படி கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு 4 டன் மலர் மாலைகளால் சந்தன காப்புடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய மலர்களான செவ்வந்தி, ரோஜா, அருகம்புல் ஆகிய பூ மாலைகளை விநாயகருக்கு அலங்காரமாக அணிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவில் நிர்வாகம் தரப்பிலும் பக்தர்கள் வரிசையாக நின்று வழிபடும் வகையில் தடுப்புகளானது அமைக்கப்பட்டுள்ளது மேலும் இப்பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே உயரமான ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலை உள்ள கோவில் இதுவாகும். இங்குள்ள விநாயகர் சிலையின் உயரம் 19 அடி, 190 டன் ஆகும்.

Advertisement

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...