கோவை: கோவை தேர்நிலைத்திடலில் கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் கோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் முகப்பு, முருகனின் ஆறுபடை வீடுகள், கோவையின் காவல் தெய்வங்கள் என அனைவரையும் கவரும் வகையில் தேர்நிலை திடல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி அனைத்து பகுதிகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தேர் நிலைத்திடல் பகுதியில் கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோவில் முகப்பு போன்று அமைத்து இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் உட்புறத்தில் இரு புறமும் முருகனின் ஆறுபடை வீடுகள், 10 அடி உயர ராஜ கணபதி விநாயகர் சிலைக்கு இருபுறமும் கோவையின் காவல் தெய்வங்களாக விளங்கும் கோனியம்மன் தண்டுமாரியம்மன் படங்களும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்கரிப்பு அங்கு வரும் அனைத்து பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது.