கோவை: கோவையில் தண்ணீர் தொட்டியில் யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் அருந்தும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. அதே சமயம் வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வந்து ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் உட்பட்ட சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தில் யானைகள் கூட்டமாக வந்து வனப்பகுதி ஒட்டி உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தும் காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பதிவு வருகிறது.மேலும் வனப்பகுதியில் வறச்சி போக்க அதிக அளவில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



