வெளிநாட்டில் படிக்கணுமா? ஆர்வம் மட்டும் போதும்; சொல்கிறார் அனிதா காமராஜ்!

கோவை: அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் மேலை நாடுகளில் மருத்துவம் படிக்க, ரூ.3 லட்சம் வழங்கிய ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் இந்த ஆண்டுக்கான மாணவர்களைத் தேர்வு செய்து வருவதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள், கல்வி உதவித் தொகை என ஆண்டுதோறும் சுமார் 50 மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் உதவி வருகிறது.

Advertisement

இந்த ஆண்டு வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான, அட்மிஷன், விசா, டாக்குமெண்டேஷன், விமான கட்டணம் என ரூ.3 லட்ச ரூபாயை, முற்றிலும் இலவசமாக வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக நிறுவனத்தின் இயக்குனர் அனிதா காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஷாலோம் எஜுகேஷன் மையத்தில் நடைபெற்றது.

Advertisement

அப்போது அனிதா காமராஜ் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஷாலோம் எஜுகேஷனல் நிறுவனத்தில் வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயில பதிவு செய்யும் முதல் 125 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணங்களில் இருந்து 100 சதவிகிதம் விலக்கு அளிக்கப்பட உள்ளோம்.

முதல் 125 மாணவர்களில், 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆறு வருடத்திற்கான மொத்த கல்வி கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் விலக்கு அளிக்கிறோம்.

மேலும் தென் அமெரிக்கா, போலந்து, ரஷ்யா, உக்ரைன், அர்மேனியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம், போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

கடந்த 16 ஆண்டுகளில், 1500க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவு செய்துள்ளோம். தற்போது நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலை நாடுகளில் மருத்துவம் படிக்க ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் அவர்களின் கனவை நாங்கள் நனைவாக்கித் தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group