கோவை: கோவையில் குவாரி குத்தகை எடுக்க நினைபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறு கனிமங்களான சாதாரண கற்கள் கிரானைட், கிராவல் மற்றும் மண் போன்றவற்றிற்கு குத்தகை உரிமம் பெற விரும்புபவர்கள் ஏப்ரல் 7 முதல் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தற்போது வரை மேற்கண்ட சிறு கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் கோரி நேரடியாக மற்றும் தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 7ம் தேதி முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாதாரண கற்கள் கிரானைட், கிராவல் மற்றும் மண் போன்றவற்றிற்கு குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://mimas.tn.gov.in/dist/auth/login என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே, குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இனிவரும் காலங்களில் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.