கோவை: கோவையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று சென்று அழுத்து போய் விட்டதா? ரொம்ப தொலைவும் அல்லாமல், கோவையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தொலைவில் ஏதேனும் சுற்றுலா தளங்கள் (Tourist spots near Coimbatore) இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இது உங்களுக்கான பதிவு தான்.
கோவையை சுற்றி ஒரு சில கிலோ மீட்டர்களில் குடும்பத்தோடும், நண்பர்களோடும் பொழுதைக் கழிக்கும் விதமாக பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.
அவற்றில் முக்கிய 6 சுற்றுலாத் தளங்களை வாசகர்களுக்காக பட்டியலிடுகிறோம்
கோவையில் இருந்து 35 கி.மீ தூரம் பயணித்தால் கோவை குற்றலத்தை அடைந்துவிடலாம். இந்த அருவியில் குளித்து மகிழ பெரியவர்களுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.25 என்ற கட்டணத்தை வனத்துறை வசூலிக்கிறது. பார்க்கிங் கட்டணமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20, பேருந்துகளுக்கு ரூ.100, கார் மற்றும் வேன்களுக்கு ரூ.50 என்ற கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
கோவையில் இருந்து சிறுவாணி மற்றும் சாடிவயல் செல்லும் பேருந்துகள் மூலம் இந்த அருவிக்குச் செல்லலாம்.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருவிக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு மேல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மீறி குளிப்பவர்களை வனக்காவலர்கள் வெளியேற்றுவர்.
உள்ளூர் வெளியூர்வாசிகள் பலரும் தினமும் இந்த சுற்றுலாத்தலங்களுக்கு சென்று அருவியில் ஆனந்தமாய் நீராடி வருகின்றனர்.

ஆழியாறு அணை
பொள்ளாச்சி ஆழியாறு மற்றும் குரங்கருவி – மொத்தம் 67 கி.மீ., தொலைவு, பயணநேரம் – 1.30 மணிநேரம்
ஆனைமலையில் உற்பத்தியாகும் பல ஆறுகளில் ஒன்று தான் ஆழியாறு. இந்த அணையானது, 3 புறமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கையை சூழலைக் கொண்டுள்ளது. இந்த அணையின் முன்புறத்தில் பூங்கா, மீன் காட்சியகம் மற்றும் தீம் பார்க்குகள் அமைந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, உல்லாச படகு சவாரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அணையை கடந்து வால்பாறை சாலையில் சென்றால், குரங்கு அருவி எனப்படும் சிற்றருவி உள்ளது. இது பெரும்பாலான திரைப்பட இயக்குனர்களின் சூட்டிங் ஸ்பாட்டாக இருந்துள்ளது.
கொடிவேரி

ஈரோடு, கொடிவேரி அணை – பயண தூரம் 75 கி.மீ., பயண நேரம் – 1.45 மணிநேரம்,
கோவையில் மட்டுமல்லாது கோவையை சுற்றி சில கிலோ மீட்டர்களில் பயணித்தால், பொழுதை கழிக்க ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படியிருக்கும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் கொடிவேரி அணைக்கட்டு.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில், சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இந்த அணை அமைந்துள்ளது. கோவையில் இருந்து சுமார் 75 கி.மீ., தொலைவில் உள்ள கொடிவேரி அணைக்கு அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சொந்த வாகனத்திலோ, வாடகை வாகனத்திலோ சென்றால், சுமார் ஒன்றரை மணிநேரத்தில் அணைக்கு சென்றடையலாம்.
“Shop Your Travel Essentials Here – Order Now!” ✈️🎒


கேத்தரின் அருவி

நீலகிரி, கேத்தரின் அருவி – பயணதூரம் 68 கி.மீ., பயண நேரம் – 1.50 மணிநேரம்
பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் அறிந்திடாத இடம் தான் கேத்தரின் அருவி. இது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து அரவேணு பிரிவு சாலையில் உள்ளது.
கோத்தகிரியில் இருந்து 7 கி.மீ., தொலைவிலும், குன்னூரில் இருந்து 21 கி.மீ., தொலைவிலும் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பகுதியிலிருந்து அடர்ந்த காடுகளையும், மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதியையும் பார்க்க முடியும்.
தேயிலைச் செடிகள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதிக்குச் சென்றால், ஒரு சிறிய டிரக்கிங் செல்வது போன்ற உணர்வைக் கொடுக்கும். நீலகிரி மலைகளில் இது 2வது உயரமான மலையாகும். இங்கு சுமார் 250 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் அருவியாகக் கீழே கொட்டுகிறது.
மலம்புழா அணை

கேரளா, மலம்புழா அணை – பயண தூரம் 52 கி.மீ., பயண நேரம் 1.15 மணிநேரம்
தமிழகம் – கேரளா எல்லையில் அமைந்திருப்பது மலம்புழா அணை. கோவையில் இருந்து சுமார் 50 கி.மீ., தொலைவில் இந்த அணை உள்ளது. வாளையாறு வழியாக சுமார் ஒரு மணிநேரம் பயணத்தால் இந்த அணைக்குச் சென்று விடலாம்.
தற்போது, கேரளாவுக்குள் மலம்புழா அணை அமைந்திருந்தாலும், இந்த அணையைக் கட்டியது நம் காமராஜர் தான். மெட்ராஸ் மாகாணத்தில் ஒரு பகுதியாக பாலக்காடு இருந்த போது, இந்த அணை கட்டப்பட்டது.
காமராஜர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டை இன்றும் நம்மால் காணமுடியும். ரோப்-வே, பாம்பு பண்ணை உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உள்ளன.


திருமூர்த்தி அணை

திருப்பூர், திருமூர்த்தி அணை மற்றும் முதலை பண்ணை – பயண தூரம்-81.கி.மீ., பயண நேரம்-1.50 மணிநேரம்
கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் கோவையின் அண்டை மாவட்டமான திருப்பூரின் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது இந்த அணைக்கட்டு.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின்கீழ் வரும் இந்தப் பகுதியில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை முக்கியமான சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளன. அதற்கு பக்கத்திலேயே வனத்துறைக்குச் சொந்தமான முதலைப் பண்ணையும் இருக்கிறது.
1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பண்ணையில் 10 தொட்டிகளில் முதலைகள் வளர்க்கப்படுகின்றன. நன்னீர் முதலைகள் 100 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
கோடை விடுமுறையில் இந்த சுற்றுலாத்தலத்தை கோவை மக்கள் தவறவிடக் கூடாது. அரசுப் பேருந்துகள், தனியார் அல்லது வாடகை வாகனங்களில் இப்பகுதிக்குச் செல்லலாம். திருமூர்த்தி மலை செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த டூர் செய்தியை உங்கள் டூரிஸ்ட் பேமிலி மற்றும் ப்ரண்ட்ஸ்க்கு ஷேர் செய்து, உடனே ட்ரிப்புக்கு ப்ளான் பண்ணுங்க மக்களே.