Header Top Ad
Header Top Ad

மக்களே கவனம்… தினமும் உங்களிடம் எப்படி மோசடி பண்றாங்க பாருங்கள்; வசமாக சிக்கிய கும்பல்! – VIDEO காட்சிகள்

கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழக்கடையில் ஏற்பட்ட எடை மோசடி சம்பவம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர். இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்குக் காய்கறி வாங்கச் சென்று இருந்தார்.

காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சந்தையின் அருகே மினிடோரர் ஆட்டோவில் ஆப்பிள் விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.

அதிலிருந்து 2 கிலோ ஆப்பிள் வாங்கியுள்ளார். குறைவான ஆப்பில் இருந்ததை கண்டு, அருகிலிருந்த மற்றொரு கடையில் எடையைச் சோதித்த போது, அது 1,800 கிராம் மட்டுமே இருந்தது.

அதன் பின், அவர் மீண்டும் பழம் வாங்கிய கடைக்குச் சென்று எடையைச் சோதனை செய்த போது, அங்கு எடை இயந்திரம் 2 கிலோ என்று காண்பித்தது.

எப்படி இந்த வேறுபாடு? என்று கேட்டதற்கு, கடை தொழிலாளி ஒருவர் எடை இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்தினார். அப்பொழுது எடை 1,855 என்ற அளவை காட்டியது.

Advertisement

இதனால், ஒரு கிலோவுக்கு 100 கிராம் குறைத்தும், 2 கிலோவுக்கு 200 கிராம் குறைத்தும் பழங்களை விற்பனை செய்து மோசடி செய்து வந்தது

இதுகுறித்து அந்த கடை ஊழியரிடம் கேள்வி எழுப்பியபோது, “யார்கிட்ட வேண்டுமானாலும் கம்ப்ளைன்ட் பண்ணு. போலீஸ்காரங்க டெய்லி வந்து வாங்கிட்டு போறாங்க. எல்லாத்துக்கும் தெரியும்” என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

இதுபோன்ற எடை மோசடிகள், சந்தை மற்றும் சாலையோர கடைகள் மட்டுமல்லாது பெரிய நிறுவனங்களிலும் அரங்கேறி வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் சவுந்தர் தெரிவித்தார்.

நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டியதோடு, வணிகக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்த அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியும்.

Recent News