பெண்கள் பாதுகாப்பு- கோவையை சேர்ந்த அல்ட்ரா சைக்கிளிங் வீரரின் 500 கிமீ பயணம்…

கோவை: பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அல்ட்ரா சைக்கிள் வீரர் 500 கிமீ பயணம் மேற்கொண்டார்.

பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி 500 கி.மீ. தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்து விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்ட கோவை அல்ட்ரா சைக்கிளிஸ்ட் அமைப்பினர்.

Advertisement

கோயம்புத்தூரைச் சேர்ந்த அல்ட்ரா சைக்கிள் வீரர் ஜி.டி. விஷ்ணுராம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 500 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை நேற்று துவங்கிய் 15 மணி நேரம் 8 நிமிடங்களில் நிறைவு செய்து சாதனை செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வேண்டும், சைபர் குற்றங்களில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும், மற்றும் “போதைப்பொருட்களு நோ சொல்வோம்” ஆகியவற்றை கருப்பொருள்களாக கொண்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று இராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இருந்து பயணத்தை துவங்கிய விஷ்ணுராம் இன்று கோவையில் நிறைவு செய்தார்.

சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு சம்பவம் தன்னை இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு பயணத்தை துவங்க தூண்டியதாகக் கூறிய விஷ்ணுராம், முக்கியமான கருப்பொருட்கள் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், காவல் உதவி செயலி (Kaaval Uthavi App), பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண் (Women & Child Helpline)

பிங்க் பெட்ரோல் எனும் மகளிர் பாதுகாப்புக்கான ரோந்து வாகனம் போன்ற முக்கியமான பாதுகாப்பு திட்டங்களை பிரபலப்படுத்தவும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்

இந்தப் பயணத்தை இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தனுஷ்கோடியில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அங்கிருந்து இராமநாதபுரம், மதுரை, தேனி வழியாகக் கோவையை வந்தடைந்தார்.

இந்தப் பயணத்தின் நிறைவாக கோவை விமான நிலையம் அருகே துவங்கி கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் முடிவற்றது. இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Recent News

Video

Join WhatsApp