சர்க்கரை நோய்; ஏன்? எதனால்? எப்படி குணப்படுத்துவது? Dr Preethi explains

டைபட்டிஸ், நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்பது உடலில் இன்சுலின் குறைபாட்டால் ஏற்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் படி நாட்டில் 10 கோடிக்கு மேற்பட்டோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதும், 13 கோடிக்கு மேற்பட்டோர் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14ம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை காந்திபுரம் ப்ரீத்தி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் ப்ரீத்தியிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பினோம், அதற்கு ப்ரீத்தி கூறியதாவது:-

சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று டைப் 1, மற்றொன்று டைப் 2. டைப் 1 என்பது குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய். டைப் 2 என்பது பெரியவர்களுக்கு ஏற்படுவது.

முந்தய காலகட்டங்களில் 40-45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் ஏற்பட்டு வந்தது. ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றம் காரணமாக தற்போது 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கூட சக்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் சரியான வாழ்க்கை முறை பின்பற்றாத போதும் மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ளாத போதும் முக்கியமாக நரம்பு மண்டல பாதிப்பைச் சந்திக்கின்றனர்.

அடுத்து, கிட்னி மற்றும் கண் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் இருதய நோய் பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடும்.

நரம்பு மண்டல பாதிப்பை டயாபடிக் நியூரோபதி என்று அழைக்கிறோம். முதலில் கை-கால்களில் மறமறப்பு அல்லது ஊசியை வைத்து குத்துவது போல் உணர்வு ஏற்படும். பிறகு தொடு உணர்வு குறைவாக இருக்கும் அல்லது முற்றிலும் இல்லாமல் போகலாம்.

இந்த நேரத்தில் ஏதாவது காயம் ஏற்பட்டால் கூட அவர்களுக்கு தெரியாது. மேலும் அந்த காயம் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். காயம் பெரிதாகிக் கொண்டே கூட செல்லலாம். இதனால் சீழ் பிடித்து கால் அல்லது கையை அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

அடுத்து, கிட்னியில் இருந்து புரோட்டின் சத்து மிக அதிக அளவில் வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும். இதனாலேயே ஆண்டுக்கு ஒரு முறை யூரியா கிரியேஷன் லெவல் பரிசோதிக்கச் சொல்கிறோம்.

அடுத்து கண் பாதிப்பு. கண் மங்கலாக தெரிவது, கண்ணில் ஏதோ மிதப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நோய் முற்றிய காலகட்டத்தில் கண்பார்வையை பறிபோகும் அபாயம் உள்ளது.

முதலில் சாப்பிடும் முன் உடலில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். பிறகு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து ரத்த பரிசோதனை செய்து சர்க்கரை அளவைப் பார்க்க வேண்டும்.

அதோடு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து, சர்க்கரை அளவின் சராசரியை அறிய வேண்டும். இதுவே நீரிழிவு நோய் பரிசோதனைக்கான முறை.

ரேண்டம் பிளட் சுகர் என்பது அப்போதைக்கு எடுக்கப்படும் பரிசோதனை மட்டுமே. அதில் துல்லியமான சர்க்கரை அளவை கணக்கிட முடியாது.

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கும் அந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே சர்க்கரை நோய் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள் தற்போது முதலே தங்கள வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுபவர்கள், இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்கள் அதிகரித்திருப்பதால் இளம் வயதிலேயே பலர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

சர்க்கரை நோய் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி உணவில் எப்போதும் முக்கியத்துவம் காட்ட வேண்டும் குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரோட்டின் மற்றும் பைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் இன்சுலின் குறைபாட்டை நிர்ணயிப்பது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு மருத்துவர் ப்ரீத்தி கூறினார்.

explaining diabetes awareness on World Diabetes Day

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆகத்தான்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி

விஜய் முதலமைச்சராகும் நோக்கத்துடன்தான் அரசியலுக்கு வந்துள்ளார்; துணை முதலமைச்சர் பேச்சிற்கே இடமில்லை என கோவையில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...