கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தவிர சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. மீண்டும் அதேபோன்ற மிரட்டல் 9 வது முறையாக வந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அலுவலகத்தின் பிரதான கட்டடங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், பதிவறைகள், கூட்டரங்குகள், பின்புற வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Advertisement

கடந்த நான்கு மாதங்களில் 9 வது முறையாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News

சினிமா நடிகரின் கட்சியை முடித்து விட்ட தொகுதி கோவை தெற்கு தொகுதி- வானதி சீனிவாசன் பெருமிதம்…

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி தெற்கு தொகுதி என்று வானதி சீனிவாசன் பெருமிதம் கொண்டார். பாஜக வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் கோவை புளியகுளம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...

Video

Join WhatsApp