கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இந்த வாரம் முழுவதும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதுகுறித்து NEWS CLOUDS COIMBATORE செய்தித்தளம் தனது வாராந்திர வானிலை முன்னறிவிப்பு செய்தியை வெளியிட்டது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை (ஜூலை 25) மற்றும் நாளை மறுநாள் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.