கோவையில் 1.75 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய பட்டதாரி இளம் பெண்!

கோவை: கோவையில் கஞ்சா விற்ற பட்டதாரி இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பின்புறம் உள்ள காலி இடத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்றிருந்த ஒரு இளம்பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் முன்னுக்கு பின் மழுப்பலான பதிலை கூறினார். போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், கஞ்சா விற்றது பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்குபாளையத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரது மகள் சஜனா (23) என்பதும், பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சஜனாவை கைது செய்து, அவரிடம் இருந்து 1.750 கி.கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவருடன் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டதாரி இளம் பெண் கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி இருப்பது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp