கோவை: கோவையில் ஆதவற்ற முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர் செல்வபுரம் எல்.ஐ.சி காலணியில் சாலை ஓரத்தில் முதியவர் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது தலையில் யாரோ கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலிசார் விசாரணையில் அந்த முதியவர் சாலை ஓரங்களில் தங்கியிருப்பவர் என தெரியவந்தது.
தொடர் விசாரணையில் பேரூர் பகுதியை சேர்ந்த விஜய் (21) என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் முதியவரை விஜய் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
விநாயகர் சதூர்த்திக்கு முன் தினம் இரவு இருவரும் சாலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது முதியவர் தனது தாய் பற்றி அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஜய் ஏற்கனவே கடந்த 2018 கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் வெளியே வந்ததும் தற்போது மீண்டும் கொலையை செய்தது குறிப்பிடத்தக்கது.