கோவையில் சிலிண்டர் கள்ளச்சந்தை அதிர்ச்சி… தப்பியோடிய 3 பேருக்கு போலீஸ் வலை!

கோவை: கள்ளச் சந்தையில் சிலிண்டர்களை பதுக்கிய வழக்கில் பெண் உட்பட 3 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்தி சில வியாபாரிகள் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.

அரசு நிர்ணயித்த வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,100 ஆக இருந்த நிலையில், பதுக்கி வைக்கப்பட்ட சிலிண்டர்கள் ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஏஜென்சில் கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் பெட்ரோலியம் அதிகாரிகள், சிவில் சப்ளை சிஐடி போலீசாருடன் இணைந்து லட்சுமி மில்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள விநாயகர் கோயில் தெருவில் எரிவாயு ஏஜென்சியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 1,000 வர்த்தக சிலிண்டர்கள் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், வருவாய் துறை அதிகாரிகளால் ஏஜென்சிக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சிலிண்டர் ஏஜென்சி நடத்தி வந்த லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி திவ்யபாரதி (30) மற்றும் சிலிண்டர சப்ளையர்கள் ஈரோடு விஜயமங்கலத்தை சேர்ந்த பிரதிப் (40), கணேசமூர்த்தி (40) ஆகியோர் மீதும் நேற்று முன்தினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் அவர்கள் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் 6.5 லட்சம் பறிமுதல்…

கோவை: கோவையில் ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 6.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...