தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகச் சிறந்த மாதமாக அமைய உள்ளது. இந்த மாதம் 12ம் தேதி ஒரே நாளில் ரொமான்ஸ், திரில்லர், ஆக்சன், மாயாஜாலம், குடும்ப டிராமா உள்ளிட்ட பல்வேறு கதையம்சங்களைக் கொண்டு 8 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.
அந்தப் படங்களில் விவரங்களை இங்கு பார்ப்போம்.
அந்த ஏழு நாட்கள்
செப்டம்பர் 12ம் தேதி வெளியாகும் ரொமாண்டிக் திரில்லர் படம் இது. பாக்யராஜ் நடிப்பில் கடந்த 1981ல் வெளியான அந்த ஏழு நாட்கள் என்ற படத்தின், அதே தலைப்பில் இந்த படமும் வெளியாக உள்ள நிலையில், இதில் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரொமான்டிக் த்ரில்லர் கதைக் களத்தில் உருவாகியுள்ள அந்த 7 நாட்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அஜிதேஜ் மற்றும் ஸ்ரீ ஸ்வேதா நடித்துள்ளனர். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் முரளி கபீர்தாஸ் தயாரிப்பில் எம்.சுந்தர் இயக்கும் இந்த படத்திற்கு சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் First Single வெளியாகி ஹிட் அடித்துள்ளது.
தனல்
அதர்வா முரளி மற்றும் லவன்யா திரிபாதி நடிக்கும் தனல் ஒரு ஆக்ஷன் டிராமா உற்சாகமான ஸ்டண்ட்ஸ் மற்றும் சஸ்பென்ஸ் கொண்டது. இந்த படத்தை ரவிந்திர மாதவா இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையுடன், சக்தி சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் மெருகூட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
செப்டம்பரில் இது ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட தமிழ் திரைப்படமாக இருக்கும்
பாம்
மாயாஜால கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது பாம். இந்த படத்தில் அர்ஜுன்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சிவத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புளி, பாலசரவணன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
கதா சுருமார் & கருமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை விஷால் வெங்கட் இயக்க, மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபாரிகிரிசன் ஆகியோர் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
கற்பனை கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தை பாரம்பரியத் திரைப்படங்களுக்கு மாற்றான படங்களைத் தேடும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சீத பயணம்
ரொமான்டிக் மற்றும் குடும்ப பின்னணி கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், அர்ஜுன் சர்தா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை அர்ஜுன் சர்தா தயாரித்துள்ளார். அனுப் ரூபன்ஸ் இசையமைத்துள்ளார்.
காயல்
காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது காயல். காதல் மற்றும் உறவுகளைக் குறிக்கும் இனிமையான இப்படத்தில் லிங்கேஷ் காயத்ரி, அனு மொல், ரமேஷ் திலாக் நடித்துள்ளனர். தமயந்தி இப்படத்தை இயக்க ஜெசு சுந்தரமரன் (J Studios) தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் கெனேனியா இசையமைத்துள்ளார்.
பிளாக்மெயில்
திரில்லர் கதையம்சத்தில் வருகிறது பிளாக்மெயில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகும் இந்த படத்தில் தேஜு அஷ்வினி, ஸ்ரிகாந்த் நடித்துள்ளனர்.
சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தை மூ.மரன் எழுதி இயக்கியுள்ளார். தேவகணி அமல்ராஜ் தயாரித்துள்ளார். சம் CS இசையமைத்துள்ளார்.
மிராய்
ஆக்ஷன் & சாகசம் கதையம்சத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது. தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரிதிகா நாயக் நடித்துள்ளனர். இயக்கம் & திரைக்கதையை கார்த்திக் கத்தம்னேனி கவனிக்க T.G. விஷ்வா பிரதப் கிருதி பிரதப் தயாரித்துள்ளார்.
குமார சம்பவம்
இப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்த குமரன் தங்கராஜன் ஹீரோவாக நடித்துள்ளார். நகைச்சுவையையும் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது இப்படம். பாலாஜி வேணுகோபால் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படி பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், சினிமா காதலர்கள், “செப்டம்பர் மாதம்… செப்டம்பர் மாதம்… வாழ்வின் துன்பத்தை தொலைத்துவிட்டோம்…” என்று பாடத் தொடங்கிவிட்டனர்.