கோவை: கோவை மாநகராட்சியில் உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் (பணியாளர்) மோகனசுந்தரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி (மண்டலம் – 1) உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் (வருவாய்) கனகராஜ் மாற்றப்பட்டு கோவை மாநகராட்சி வடக்கு மண்டல உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


 
                                    
