கோவையில் நாளை முதல் மழை! முழு விவரம் இதோ!

கோவை: கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

கோவையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அச்சப்படும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கோவையில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுநாளும், மார்ச் 19-ம் தேதியும் கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மழை பெய்யும் போது வெப்பநிலை குறைந்தாலும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வானிலை தகவலை உங்கள் சுற்றுவட்டார மக்களுடன் பகிர்ந்து, அவர்களும் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள உதவுங்கள்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...