கோவை மாணவி வழக்கு; குண்டடிபட்டவரக்ள் டிஸ்சார்ஜ்!

கோவை: கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் இரு கால்களில் குண்டடிபட்ட மேலும் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். ஒண்டிப்புதூரை சேர்ந்த மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் தனது 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து மாணவி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரே மொபட்டில் வந்த 3 வாலிபர்கள் மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் தலையில் வெட்டி தாக்கிவிட்டு மாணவியை அங்கிருந்து இழுத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சகோதரர்களான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினரான மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர்.

அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை முடிந்த பின்னர் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரிடம் விசாரணை செய்தார். பின்னர் வருகிற 19ம் தேதி வரை 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதேபோல பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பரிடம் வடக்கு ஆர்டிஓ ராமகிருஷ்ணன் விசாரித்தார். மேலும், அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், 2 காலில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வந்த குணா என்கிற தவசி குணமடைந்து. நேற்று முன்தினம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த 2 காலில் குண்டடிபட்ட சதீஷ் என்கிற கருப்பசாமியும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேபோல அரிவால் வெட்டில் காயம் அடைந்த மாணவியின் ஆண் நண்பரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கோவை, மாணவி வழக்கு, Coimbatore student case, assault, police firing, accused discharged

Recent News

Video

Join WhatsApp