News Clouds Coimbatore செய்தி எதிரொலி: உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக News Clouds Coimbatore வாசகரின் புகாரின் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

News Clouds Coimbatore செய்தித்தளத்தின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பினார்.

அதில் கோவையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டின் பின்புறம் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், கழிப்பறை வசதி இல்லாததால் சிலர் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

இந்த செய்தி நமது செய்தித்தளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டது. மேலும், நமது சமூக வலைதளப்பக்கங்களில் இந்த வீடியோ காட்சிகள் பகிரப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கோவை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியை சுத்தப்படுத்தி ப்ளீச்சிங் பவுர் தெளித்து நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே லங்கா கார்னர் முதல், கலெக்டர் அலுவலகம் வரையில் பொதுக்கழிப்பிட வசதி இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “இந்த பிரச்சனை தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். குறிப்பிட்ட இடத்தில் போதிய இடம் இல்லாததால் கழிப்பறை அமைப்பதில் சிக்கல் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக செவி சாய்த்த மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உங்கள் பகுதி பிரச்சனைகளை வீடியோ அல்லது போட்டோ எடுத்து எங்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் பகிருங்கள்… இணைந்து தீர்வுகாண முயல்வோம்…

Recent News

Video

கோவையில் முட்டிக்கொண்ட காட்டு யானைகள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டத்தில் இரண்டு யானைகள் முட்டி மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான...
Join WhatsApp