தொடங்குகிறது கோவை விழா: நாளைய நிகழ்வுகள் என்னென்ன?

கோவை: கோவையின் பெருமையை பறைசாற்றும் கோவை விழாவின் நாளைய நிகழ்வுகள் என்னென்ன என்பதை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

கோவையின் பெருமை, பாரம்பரியம், தொழில்துறை வளர்ச்சி, மற்றும் மக்களின் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் கோவை விழா நடத்தப்பட்டு வருகிறது.

நகரின் பல்வேறு கல்வி, தொழில், மற்றும் கலாசார நிறுவனங்கள் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து கோவை விழாவை நடத்துகின்றன.

இதில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள், சுற்றுச்சூழல் இயக்கங்கள், தொழில்நுட்பக் கண்காட்சிகள் என பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இதனிடையே கோவை விழா நாளை (Nov 14) தொடங்குகிறது. தொடக்க விழாவிலேயே பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

காலை 08.30 மணி – Rally for Resilience எனப்படும் பேரணி பிஷப் அப்பாசாமி கல்லூரியில் தொடங்குகிறது.

காலை 10.00 மணி – Vintage Car Rally, கோஸ்மோ கிளப்பில் இருந்து தொடங்குகிறது; பழமையான கார்களின் அணிவகுப்பு இதில் இடம்பெறுகிறது.

மதியம் 12.00 மணி – Coimbatore Science and Technology Festival, கோடிசியா D ஹாலில் தொடங்கி, மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மாலை 04.00 மணி – Orumai Payanam – Interfaith Prayer போத்தனூர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிறது; மதங்களைத் தாண்டிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக இது அமைந்துள்ளது.

மாலை 06.30 மணி – Sky Dance – Laser Projection Show கோடிசியா மைதானத்தில் லேசர் ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

kovai vizha events tomorrow

Recent News

Video

Join WhatsApp