கோவையில் கார் பந்தயம்; துருவ் கோஸ்வாமி சாம்பியன்

கோவை: செட்டிபாளையம் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் கடந்த 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் 28வது ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் எல்ஜிபி பார்முலா 4வது பிரிவில் பெங்களூரை சேர்ந்த துருவ் கோஸ்வாமி சாம்பியன் பட்டம் வென்றார். மற்றொரு எல்ஜிபி பார்முலா பிரிவில் அஹுரா ரேசிங்கின் மோனித் குமரன் ஸ்ரீனிவாசன் ரூக்கி வெற்றி பெற்றார்.

Advertisement

பிஐஏ-சான்றளிக்கப்பட்ட பார்முலா 4 இந்திய சாம்பியன்ஷிப்பின் 4வது சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா லுவிவே சம்புட்லா தொடக்க போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார். கென்யாவின் ஷேன் சந்தாரியா 2வது இடம் பிடித்தார்.

இறுதி சுற்றில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் இந்திய வீரர் இஷான் மாதேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சம்புட்லா முதலிடம் பிடித்தார். மற்றொரு போட்டியில், பிரெஞ்சு ஓட்டுநர் சாச்செல் ரோட்ஜ் (கிச்சாவின் கிங்ஸ் பெங்களூரு) முதலிடத்தையும், மோட்லேகர் 4வது இடத்திலிருந்து முன்னேறி 2வது இடத்தையும், ஷான் சந்தாரியா (சென்னை டர்போ ரைடர்ஸ்) மூன்றாவது இடத்தை பிடித்தனர்.

ஜே.கே. டயர் வழங்கிய ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பையில் தொழில் முறை பிரிவில் பெங்களூரு வீரர் அனிஷ் ஷெட்டி பட்டம் வென்றார்.

ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி கோப்பையின் அமெச்சூர் பிரிவில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரையன் நிக்கோலஸ் பட்டம் வென்றார்.

ஜெய் பிரசாந்த் வெங்கட் ஜென்டில்மேன் பிரிவில் வெற்றி பெற்றார். ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பையில் பொள்ளாச்சியை சேர்ந்த லோகித் லிங்கேஷ் ரவி (டிடிஎஸ் ரேசிங்) சீசனின் இறுதிப் போட்டியில் ஷூட் அவுட்டில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp