மோடி ட்ரிப்பில் குண்டு வெடிப்பை செயல்படுத்த போகிறோம் என்று வந்த இமெயிலால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் இ-மெயில் முகவரியை ஊழியர்கள் பார்வையிட்ட போது, அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு ஒரு மெயில் அனுப்பப்பட்டிருந்தது.

அதில் ”மோடி கோவை ட்ரிப்பில் குண்டுவெடிப்பை செயல்படுத்த போகிறோம்” என்று அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் இரண்டு நுழைவு வாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், 4 மாடியில் செயல்பட்டு வரும் புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் ஒவ்வொரு அலுவலக அறையிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் நீண்ட நேர சோதனைக்கு பிறகும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 10வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கும், கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரதமர் மோடி வரும் வேளையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கோவையில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

Video

Join WhatsApp