சரவணம்பட்டி, போத்தனூர், வடவள்ளியில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை: சரவணம்பட்டி, போத்தனூர், வடவள்ளியில் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 4 பேரைக் கைது செய்தனர்.

சரவணம்பட்டி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சின்னவேடம்பட்டி சத்தி நகர் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனையில் அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கோவை நல்லாம்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம்(24) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை போத்தனூர் போலீசார் நேற்று வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பின்புறம் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்ற வெறைட்டி ஹால் ரோடு சிஎம்சி காலனியை சேர்ந்த சேகர்(24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், தொண்டாமுத்தூர் ரோடு – சிறுவாணி ரோடு ஜங்சன் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தெலுங்குபாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார்(23), சவுரிபாளையம் மசக்காளி பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜசேகரன்(31) ஆகிய இருவரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 1.500 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Recent News

Video

Join WhatsApp