கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்த தந்தைக்கு தண்டனை கொடுத்தது நீதிமன்றம்!

கோவை: சிறுமியை பலாத்காரம் செய்த தந்தைக்கு தண்டனை மற்றும் அபரதம் விதித்துள்ளது கோவை போக்சோ நீதிமன்றம்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

Advertisement

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது தந்தை மது போதையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், தந்தை வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் குடித்து விட்டு வந்து அவரை பலாத்காரம் செய்தார். இது பற்றி தாயிடம் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார் என்றும் கூறி உள்ளார்.

அதன் பேரில் போலீசார் சிறுமியின் தந்தை மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Advertisement

வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் சிறுமியை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 15,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Recent News

Video

Join WhatsApp