ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முழு ஆதரவு- கோவையில் அமைச்சர் பி.டி.ஆர் பேச்சு…

கோவை: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அரசு முழு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் கோவை மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் திறக்கப்பட்டது. இதனை தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

சென்னை அண்ணா பல்கலையில் கடந்த 2023ல் துவங்கப்பட்ட மையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் புதுமையான கண்டுப்பிடிப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் இதன் ஒரு பகுதியாக தற்போது கோவை மண்டலத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு வருட முயற்சிக்கு பின் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகளவிலான ஸ்டார்ட்அப்கள், புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர் ஸ்டார்ட் அப்-களுக்கு ஆய்வகங்கள், வடிவமைப்பு வசதிகள், துல்லிய சோதனை மையங்கள், சட்ட மற்றும் தொழில்முறை வழிகாட்டல் போன்றவைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Recent News

Video

Join WhatsApp