கோவையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

கோவை: கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காந்திபுரம் சிறைச்சாலை வளாகப் பகுதியில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் 208.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே என் நேரு, டி.ஆர்.பி ராஜா, சாமிநாதன், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க முதல்வருக்கு திமுகவினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் செம்மொழி பூங்காவை திறந்து வைப்பதற்காக புறப்பட்டார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சென்ற அவர் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி அருகில் இருந்து புதிதாக கட்டப்பட்ட ஜிடி மேம்பாலத்தில் பயணம் செய்து செம்மொழி பூங்கா திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp