கோவையில் கருப்புக் கொடி: Go Back Stalin கோஷம் எழுப்பிய பாஜக தொண்டர்கள்! VIDEO

கோவை: கோவையில் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் Go Back Stalin கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காந்திபுரம் சிறைச்சாலை வளாகப் பகுதியில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் 208.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

இதற்காக விமான மூலம் கோவை வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே என் நேரு, டி.ஆர்.பி ராஜா, சாமிநாதன், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

இதனிடையே மெட்ரோ திட்டம் ரத்தாக காரணம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவையில் பாஜக இளைஞரணியினர் முதலமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதோடு Go back Stalin என்ற கோஷங்களை எழுப்பினர். சிவானந்தாகாலனி அருகே நடைபெற்ற இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜக.,வினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Recent News

Video

Join WhatsApp