கோவையில் 6 விமானங்கள் சேவை ரத்து!

கோவை: கோவையில் 6 விமானங்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் இண்டிகே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த நிறுவனத்தின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

Advertisement

இன்றும் நாடு முழுவது இண்டிகோ நிறுவனத்தின் 250க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனிடையே கோவையில் 6 விமானங்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விவரம் பின்வருமாறு:-

1. 6e-6194/981 MAA–CJB–MAA 07:35 / 08:05   04-12-25    

2 6e-317/318 BLR–CJB–BLR 08:00 / 08:35 04-12-25
3 6e-479/6797 MAA–CJB–MAA 11:15 / 11:45 04-12-25
4 6e-927/6011 MAA–CJB–MAA 13:40 / 14:10 04-12-25
5 6e-6232/6231 HYD–CJB–HYD 23:05 / 23:35 04-12-25
6 6e2265/2273 BOM–CJB–BOM 13:20 / 14:15 04-12-25

ஆகிய 6 விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக கோவை விமான நிலையம் வந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp