விதை சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம்- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: விதைச்சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு விதைச்சான்று மீதான புதிய சட்டத்தையும் மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இதில் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் கொண்டுவந்துள்ள புதிய விதை சட்டத்திற்கு எதிராகவும் மின்சார திருத்த சட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில் மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக இந்த புதிய விதை சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றும் இதனால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையான விதைகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தான் பெறவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் ஒருவருக்கொருவர் விதைகளை பகிர்ந்து கொள்ள கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் எந்த பயனும் இருக்காது என்றார். எனவே இந்த விதை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement

அதேபோல மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய அவர் இதனால் ஏழை எளிய விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதற்கு முன்பு டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து வருட கணக்கில் போராட்டம் நடத்தி அந்த சட்டத்தை திரும்ப பெற்றனர் என்பதை குறிபிட்ட அவர் அதே போல தற்பொழுது கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp