கோவையில் செண்ட் பாட்டிலை திருடி சென்ற பெண்- சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட கடையின் உரிமையாளர்…

கோவை: கோவையில் செண்ட் பாட்டில் திருடிச் செல்லும் பெண்ணில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் (sports hup) என்ற கடையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்ற ஒரு நபரும் பெண்ணும் வந்துள்ளனர். பின்னர் அந்த நபர் ஏதோ பொருளை கேட்ட நிலையில் கடைக்காரர் அந்த பொருளை எடுக்க சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் ரசீது பதிவு செய்யும் கணினி டேபிள் அருகே வந்து நின்ற பெண் அங்கும், இங்கும் பார்வையிட்டு பின்னர் நைசாக அந்த டேபிளில் இருந்த வாசனை திரவியம் பாட்டிலை எடுத்து மறைத்து வைத்துள்ளார்.

இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கடை உரிமையாளர் பார்த்து இதேபோன்று பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் உரிமையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். அந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Recent News

Video

Join WhatsApp