Gold price coimbatore: கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரலாற்றுச் சாதனைகள் படைத்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தங்கம் வாங்கும் கனவு சிதைந்து வருகிறது.
தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு வந்த தங்கம் இன்று விலை குறைவைச் சந்தித்துள்ளது.
கோவையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22காரட்) ரூ.345 விலை குறைந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,760 குறைந்துள்ளது.
Gold price Coimbatore
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,485க்கும், ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்து 880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.290 விலை குறைந்துள்ளது. இன்று 18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,400க்கும், ஒரு பவுன் ரூ.83,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Silver price Coimbatore
தங்கத்தை விட பல மடங்கு அதிக வேகத்தில் வெள்ளி விலையும் உயர்ந்து வரும் நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.258க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,58,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

