கோவை: மேற்கு மண்டல ஐஜி(கோவை) மற்றும் கோவை போலிஸ் கமிஷனருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள்,
15 எஸ்பிகள், 2 கூடுதல் எஸ்பிக்களுக்கு பதவி உயர் மற்றும் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டம் & ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சைபர் கிரைம் கூடுதல் டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த பால நாகதேவி, பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டிஜிபியாகவும், கூடுதல் பொறுப்பாக சிவில் சப்ளை சிஐடியும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலம் (கோவை) ஐஜியாக இருந்த செந்தில்குமார், பதவி உயர்வு பெற்று டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளராக இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக இருந்த கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாக இருந்த பாலாஜி சரவணன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

