Coimbatore weather report: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒவ்வொரு நாளுக்குமான வானிலை அறிக்கையை இந்த தொகுப்பில் காணலாம்:-
ஜனவரி 7 (புதன்கிழமை):-
கோவையில் நாளை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. பகல் நேர வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
ஜனவரி 8 (வியாழக்கிழமை):-
வியாழக்கிழமை கோவையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு பெரிய வாய்ப்பு இல்லை. பகல் நேரங்களில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். இரவு நேரங்களில் குளிர்ச்சி அதிகரித்து 18 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
ஜனவரி 9 (வெள்ளிக்கிழமை):-
கோவையில் வெள்ளிக்கிழமை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பகல் நேர வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் 19 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
ஜனவரி 10 (சனிக்கிழமை):-
சனிக்கிழமை கோவையில் வெப்பநிலை சற்று குறையும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பகல் நேர வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
ஜனவரி 11 (ஞாயிற்றுக்கிழமை):-
ஞாயிற்றுக்கிழமை கோவையில் பகுதி மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். பகல் நேர வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேரங்களில் 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
ஜனவரி 12 (திங்கட்கிழமை):-
திங்கட்கிழமை கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இரவு நேரங்களில் 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும்.
வானிலை மையத்தின் கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கலாம்.

