கோவை: கோவையில் இளம் பெண்ணை காட்டி விபசாரத்திற்கு அழைத்த புரோக்கரை வாலிபர் ஒருவர் வசமாக போலீசில் சிக்க வைத்தார்.
கோவை விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவர் நேற்று மதியம் துடியலூர் மீனாட்சி கார்டன் அருகே உள்ள பகுதியில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் இளம் பெண்ணின் படத்தைக் காட்டி, தன்னிடம் இளம்பெண்கள் உள்ளதாகவும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த முத்து இதுகுறித்து நைசாக துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண்ணை காட்டி உல்லாசத்திற்கு அழைத்த நபர் தடாகம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்த ஸ்ரீ ஹரி கார்த்திக் (வயது 33) என்பது தெரிய வந்தது.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

