உஜ்வாலா திட்டம் குறித்து கோவையில் பெருமை கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர்…

கோவை: உஜ்வாலா திட்டத்தின் 80 சதவீத பயனாளிகள் கிராமங்களில் உள்ளவர்கள் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் பெருமிதம் கொண்டார்.

பாஜக தொழில்துறை வல்லுனர் பிரிவு சார்பில் Professional Connect -2026 எனும் தொழில்துறையினருக்கான கருத்தரங்கம், கோவை எஸ் என் ஆர் கல்லூரி அரங்கில், இன்று நடைபெற்றது.

இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தேசத்தின் தொழில்துறை வளர்ச்சி குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

இதில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மகளிரை மையமாக கொண்டு வளர்ச்சி அடைகின்றது எனக்கூறுவதை விட, மகளிரை முன்னிறுத்தி வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய எரிசக்தி துறை சார்பில் மகளிர் மேம்பாடு மற்றும் மகளிர் வளர்ச்சிக்கான முக்கியமான திட்டமாக பிரதமரின் உஜ்வாலா திட்டம் உள்ளது.

இத்திட்டத்தின் மூலம், அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு இணைப்பு சாத்தியமாகியுள்ளது. இது மகளிருக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. இதேபோல் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், இல்லந்தோறும் கழிவறை ஆகிய திட்டங்கள் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

மேலும் சர்வதேச அளவில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதை இந்தியாவின் ஆற்றல் (Energy) தேவை எடுத்துக்காட்டுகிறது. அந்த வகையில் வரும் ஆண்டுகளில், சர்வதேச அளவில் அதிக அளவில் எரிசக்தி உள்ளிட்ட ஆற்றலை பயன்படுத்தும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது.

நகரப் பகுதியில் மட்டுமே எரிவாயு இணைப்பு இருந்த சூழலில் இப்போது கிராமங்களுக்கும் எரிவாயு இணைப்பு சென்று அடைந்துள்ளது. சுமார் 80 சதவீத எரிவாயு இணைப்புகள் கிராமப்புறங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp