கடன் இல்லாத தமிழகம்- ஒத்த கருத்து அவசியம்- கோவையில் ஜி.கே.வாசன் பேட்டி…

கோவை: கடன் இல்லாத தமிழகத்தை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒத்த கருத்து அவசியம் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் திருமண இல்ல விழாவில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சிலர் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், NDA கூட்டணி வெற்றியை உறுதி செய்யும் வகையில் மதுராந்தகத்தில் நடைபெற உள்ள கூட்டம் அமையும் என தெரிவித்தார். அந்தக் கூட்டம் கூட்டணி கட்சி தலைவர்கள் மூலம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றும் கூறினார்.

பலமான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் தற்போது வலுவான ஆட்சி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட வாசன், பாதுகாப்பான, கடன் இல்லாத தமிழகத்தை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒத்த கருத்து அவசியம் என்றார்.

மேலும், கூட்டணியில் தங்களது பங்கை உறுதி செய்து கொள்ளும் வகையில் பல கட்சிகள் NDA-வில் இணைந்து வருவதாகவும், மக்கள் விரோத திமுக அரசை அகற்றும் அடிப்படை வெற்றிக் கூட்டணியாக NDA உருவெடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். திமுக அரசு தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறிய வாசன், கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கத்திக் குத்து சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக போதைப் பொருள் நடத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு தவறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

கோவை மாநகரம் தொடர்பாக பேசுகையில்,போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும், குப்பைகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும்,கோவை மாநகர காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றும், மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி என்பது டெல்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டணி என விளக்கம் அளித்த ஜி.கே.வாசன், NDA – அதிமுக கூட்டணி என்ற பதம் பயன்படுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட சிறிய சலசலப்புக்கு விளக்கம் அளித்தார்.

கூட்டணி இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும்,இன்னும் ஒத்த கருத்துடைய கட்சிகள் NDA-வில் இணைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கும் விருப்பம் எனவும் தெரிவித்தார்.

OPS மீண்டும் இணைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “தமிழ் மாநில காங்கிரஸ் தொடர்பான கருத்துகளை மட்டுமே நான் பேசுவேன்”** என பதிலளித்தார்.

த.வெ.க விஜயின் விசில் சத்தம் டுவிட் குறித்து பேசுகையில்,எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி. அந்த வெற்றிக் கூட்டணிக்கான அடித்தளம் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வெட்ட வெளிச்சமாக வெளிவரும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp