கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோவை: கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை கட்டிடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

கோவை, சரவணம்பட்டி சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். 42 வயது, கட்டிட தொழிலாளி. இவர் வேலை பார்க்கும் கட்டிடங்களுக்கு ஒரு பெண்ணை சித்தாள் வேலைக்கு அழைத்துச் செல்வார். அந்தப் பெண் கணவரை விட்டு பிரிந்து இருந்தார். அந்த பெண் வேலைக்கு செல்லும் போது 13 வயது மகள் வீட்டில் இருப்பவர் ஆவார்.

முத்துக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் பணம், கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் மூன்று பவுன் நகையை வாங்கி முத்துக்குமார் அடகு வைத்து இருந்தார். அந்த நகையை மீட்டுக் கொடுக்குமாறு முத்துக்குமாரிடம் பெண் வற்புறுத்தி வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அந்தப் பெண்ணின் மகளான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்பொழுது அங்கு வந்த முத்துக்குமார் சிறுமியிடம் 3 பவுன் நகையை மீட்டு தனது வீட்டில் வைத்து இருப்பதாகவும், நகையை வாங்குவதற்காக வீட்டுக்கு வருமாறு கூறிய அழைத்துச் சென்று உள்ளார்.

அப்பொழுது அவரது வீட்டில் யாரும் இல்லை இதனை பயன்படுத்திக் கொண்டு முத்துக்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமி இதனை வெளியே கூறிவிடுவாள் என்று அஞ்சிய முத்துக்குமார் சிறுமியின் முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சை திணறடித்தும், கத்தியால் கழுத்தை அழுத்தும் கொலை செய்தார்.

பின்னர் சிறுமியின் உடலை சாக்கு முட்டையில் கட்டி அந்தப் பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் போட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல் சென்று விட்டார்.

இதற்கு இடையே தன்னுடைய மகளை காணாமல் பல இடங்களில் தேடி வந்த பெண். இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்பொழுது முத்துக்குமார் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திய போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முத்துக்குமார் கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.

கோவை கிழக்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் துறையினர் 8 சட்டப் பிரிவுகளில் முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து, வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள் இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 35 ஆயிரம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

2 COMMENTS

  1. இந்த தண்டனை சரியான தீர்வு இல்லை இவனுக்கு மாருகால் மாருகை எடுக்க வேண்டும் இதை அனைவரும் பார்க்க வேண்டும் அப்போது தான் இதற்கு தீர்வு காண முடியும்

  2. இது அதிரடித் தீர்ப்பு இல்லை. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க தூக்குதண்டனை தான் சரியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp