கோவை கல்லூரியில் மாணவியை குத்திய மாணவர் சிறையிலடைப்பு

கோவை: கோவையில் காதல் விவகாரத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவியை கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஆர்.எஸ். புரத்த்தை சேர்ந்த ஹர்ஷவர்தன்(18) என்பவரும் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.

பின்னர் ஹர்ஷவர்தன் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததாகவும், வேறு சில மாணவர்களுடன் நட்பாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஹர்ஷவர்தன் மாணவி மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலை கல்லூரிக்கு வரும்போதே மாணவன் வீட்டில் இருந்து காய்கறி வெட்டும் சிறிய கத்தியை எடுத்து வந்துள்ளார். பின்னர் கல்லூரி வளாகத்தில் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

ஏன் தன்னை காதலிக்காமல் வேறு சிலருடன் பேசுவதாக வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன் தான் வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தினார். இதில் அவருக்கு கழுத்து, கைகளில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூடினர்.

உடனே மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து மாணவியை கத்தியால் குத்திய ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன்(18) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது சரவணம்பட்டி போலீசார் கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பின்னர் கைதான ஹர்ஷவர்தனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருத்துவமனையில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp