கோவை: கோவையில் உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானை தோட்டத்து வீட்டின் கதவை உடைத்தது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குறிப்பாக காட்டுயானைகள், காட்டுபன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.
இந்நிலையில் பன்னிமடை – வரப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் கதவை நள்ளிரவில் காட்டு யானை உடைத்துத் தவிடு, புண்ணாக்கு மூட்டுகளை எடுக்க முயன்றுள்ளது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின்பு யானையைப்வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அதேபோன்று நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஊருக்குள் உணவு தேடிக்கொண்டு உலா வந்த ஒற்றைக் காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

