கோவை நொய்யல் மாபெரும் திட்டத்திற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலத்தில் துவங்கும் நொய்யல் ஆறு திருப்பூர்ஈரோடு. கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள் வழியாக 15835 கி.மீ நீளத்திற்கு சென்று நொய்யல் என்னும் கிராமத்தில் காவேரி ஆற்றுடன் கலக்கிறது.

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 67.71 கி.மீ நீளத்திற்கும். கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நொய்யல் ஆறு பேரூர் செட்டிபாளையம் முதல் மேற்கிலிருந்து கிழக்காக பட்டணம் இட்டேரி சாலை வரை 18.56 கி.மீ நீளத்திற்கு அமைந்துள்ளது. இவற்றில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 9.25 கிமீ நீளத்திற்கும். மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 500 மீ நீளத்திற்கு மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 431கிமீ நீளத்திற்கும் அமைந்துள்ளது.

மேலும் நொய்யல் ஆற்றின் கரையில் அருகாமையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர் கலப்பதால், ஆற்று நீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.00 கி.மீ நீளத்திற்கு நொய்யல் ஆற்றில் மாசு குறைப்பு பணிகள் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பு முதல் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு வரை 4.30 கிமீ நீளத்திற்கு ஆற்றின் இரு கரைகளிலும் ரூ178.48 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த மேம்பாட்டு பணிகளின் கீழ் கழிவுநீர் கலப்பதை தடுத்தல் மற்றும் 10.80 கிமீ நீளத்திற்கு அருகிலுள்ள சுத்தகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்லுதல் (I&D) நல்லாமேடு, என்.பிஇட்டேரி, பட்டணம் சாலை ஆகிய 3 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைத்தல், 5205 கிமீ நீளத்திற்கு கழிவுநீர் எடுத்து செல்லும் பிரதான குழாய் அமைத்தல்.

முத்து காலனி பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 400 MLD சுத்தகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் வார்டு எண் 95 என்பி.இட்டேரி UHC அருகில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 100 MLD சுத்தகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் பெருமாள் கோவில் தெரு அருகில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 300 MLD சுத்தகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் ஆத்துப்பாலம் சந்திப்பு முதல் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு வரை 4.30 கிமீ நீளத்திற்கு நொய்யல் ஆற்றின் கரை மேம்பாட்டு பண்களான நொய்யல் ஆற்றின் நுழைவுவாயில் பகுதியில் வளைவு அமைத்தல், 4 எண்ணிக்கையிலான இழுவை அமைப்புகள்(Tensile Structuresஆற்றின் கரையோரத்தில் 60461 சதுர மீட்டர் நீளத்திற்கு ஜியோசெல் அமைப்பு அமைத்தல்ஆற்றின் கரையோரத்தில் 1950 மீட்டர் நீளத்திற்கு படிக்கட்டு வடிவ காபியன் சுவர் அமைத்தல்.

கரையோரம் 2380 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் பாலத்தில் தாங்கு சுவரில் காபியன் கல் பதித்தல் பணி எண்ணிக்கையிலான மரம் மற்றும் 50 எண்ணிக்கையிலான கற்களாலான அமர்விடங்கள் அமைத்தல், படிநிலை அமர்விடங்கள் மற்றும் தோட்ட அமைப்பு 250 ச.மீ பரப்பளவில் அமைத்தல், 1270 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் 660 மீட்டர் நீளத்திற்கு கருங்கல் சுவர் அமைத்தல், 600 மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை பாதை அமைத்தல், 4 எண்ணிக்கையில் மிதிவண்டி நிலையங்கள் அமைத்தல் ஆற்று படித்துறை அமைத்தல் (அணைக்கு அருகில்) 50 10 மீ ஆற்று படித்துறை அமைத்தல் (இட்டேரி பகுதியில் அமைந்துள்ளது.

4 இடங்களில் 420 மீட்டர் நீளத்தில், குப்பைத் தடுப்பு மிதவை அமைப்புகள் (Trash Booms)அமைத்தல், 550 ச.மீ பரப்பளவில் பார்வை மேடை (Viewing Deck) அமைத்தல், ஆற்றங்கரையில் 307 எண்ணிக்கையிலான சூரிய ஆற்றல் விளக்குகள் அமைத்தல் 5 எண்ணிக்கையில் சூரிய ஆற்றல் மர விளக்குகள் (Solar Trees) அமைத்தல், 160 எண்ணிக்கையில் பாதுகாப்புத் தூண்கள் (Bollards) அமைத்தல், ஓய்வு பகுதி (Leisure Space) அமைத்தல், ஆற்றங்கரையில் 1175கிமீ நீளத்திற்கு வேலி அமைத்தல்5 எண்ணிக்கையில் சுழலும் கதவுகள் Revolving Gate) அமைத்தல் இரும்பு பாலம் அமைத்தல், 2 எண்ணிக்கையில் சிறு பாலங்கள் அமைத்தல்

மேலும், நொய்யல் ஆற்றங்கரையில் ஆசாத் நகர், ராஜீவ் காந்தி நகர், வெள்ளலூர், போத்தனூர் ஆகிய 4 இடங்களில் பூங்காக்கள் அமைத்தல். 55 எண்ணிக்கையில் குப்பை சேகரிப்பு தொட்டிகள் அமைத்தல், 30 எண்ணிக்கையில் திட்ட விளக்க தகவல் பலகைகள் (Interpretative Signage Boards) அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு பின்பு 5 வருட காலத்திற்கு ரூ.24.20 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் விரைவில் துவங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp