கோவை வருகிறது தவெக குழு!

கோவை: தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து அக்கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே தவெக.,வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பிப்ரவரி 1ம் தேதி இக்குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

பிப்ரவரி 4ம் தேதி முதல் கடலோர மாவட்டங்களிலும், பிப்ரவரி 7ஆம் தேதி மேற்கு மண்டல மாவட்டங்களில் தவெக குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இக்குழுவினர் மக்களை சந்திக்கின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களிடையே தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கருத்துகளை கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு மண்டல மாவட்டங்களைத் தொடர்ந்து பிப்ரவரி 9ஆம் தேதி திருச்சி, தஞ்சை, திருவாரூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தவெக அறிவித்துள்ளது.

2 COMMENTS

  1. ₹ 20000 எனக்கு லோன் வேண்டும் தினசரி கட்ட வேண்டுமா மாதத்துக்கு ஒரு முறை கட்டலாமா

  2. Jalli kattu…chennai flood… Thoothukudi problem…apolam onnume panadha ( pesadha )…ivan ipo ean varan??? Basic attitude never change

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp