கோவை: தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு மருதமலையில் மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வரும் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகளைக் கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன்
நேரில் ஆய்வு செய்தார்.
மருதமலை அடிவாரம் முதல் மலைக்கோயில் வரை பக்தர்கள் செல்லும் பாதைகள், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் வழிகள் ஆகியவற்றை ஆணையர் இன்று காலை பார்வையிட்டார்.
ஆலோசனை
குறிப்பாக, மலைப்பாதையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விபத்துக்களைத் தடுக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குப் ஆலோசனைகளை வழங்கினார்.

திருவிழா நாளன்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ள வாகன நிறுத்தும் இடங்களை ஆய்வு செய்தார்.
அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் வாகனங்களின் ஒழுங்குமுறை மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

