Header Top Ad
Header Top Ad

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை: பருமனாக உள்ளவர்களுக்கு தீர்வு! கோவை மருத்துவர் பேட்டி!

கோவை: உடல் பருமனைக் குறைக்கும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை குறித்து விளக்குகிறார் மருத்துவர் பாலமுருகன்.

உடல் பருமன் என்பது பெரிய சுகாதார பிரச்சனையாக கருதப்படுகிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு உடல் பருமன் முக்கிய காரணியாக உள்ளது.

Advertisement
Lazy Placeholder

கடுமையான உடல் பருமனுடன் போராடும் நபர்களுக்கு, வாழ்க்கை முறையில் மாற்றங்கள் மட்டுமல்லாது, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை) ஒரு பயனுள்ள மற்றும் நிரந்தர தீர்வாக உள்ளதாக கோவை அன்னை மருத்துவமனையின் பேரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

Lazy Placeholder

பேரியாட்ரிக் சிகிச்சை எடை குறைப்புக்கு மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல், கருவுறாமை மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளைத் தீர்க்கவும் உதவுகிறது.

Advertisement
Lazy Placeholder

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது உணவு உட்கொள்வதைக் கட்டுப்படுத்த அல்லது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மாற்றியமைக்க வயிற்றின் அளவைக் குறைக்கும் நடைமுறைகளை உள்ளடக்கியது.

அறுவை சிகிச்சை என்பது எடை குறைப்புக்கு அடித்தளம் அமைக்கும் நேரத்தில், வாழ்நாள் முழுவதும் உடல் எடை கட்டுப்பாடு என்பது ஆரோக்கியமான உணவு, உடல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை சார்ந்துள்ளது.

170 கிலோ எடையுள்ள 44 வயது ஆண் நோயாளி ஒருவர் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் போராடி வந்தார்.

எடையை குறைக்க பல வழிமுறைகளை கையாண்ட பின் அவர், மினி காஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையைத் மேற்கொண்டார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் வெற்றிகரமாக 81 கிலோ எடையை குறைத்துள்ளார்.

Lazy Placeholder

அவரது இரத்த குளுக்கோஸ் அளவுகள் உறுதிப்படுத்தப்பட்டன, நீரிழிவு மருந்துகளின் தேவையில்லாமல் போனது. தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்பட்டது.

– பாலமுருகன்

கடுமையான உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல் நலப்பிரச்னைகளோடு போராடும் நபர்களுக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நல்ல தேர்வாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சை பல நோயாளிகளுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறது என்ற கூறலாம்.

இவ்வாறு மருத்துவர் பாலமுருகன் கூறினார்.

Recent News

Latest Articles