போக்சோ கைதி கோவை சிறையில் உயிரிழப்பு!

கோவை: சிறார்களுக்கு எதிரான குற்ற ( போக்சோ ) வழக்கில் கோவை சிறையிலடைக்கப்பட்டிந்த கைதி திடீரென உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி பெரியபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் கடந்த 2020ம் ஆண்டு போக்சோ வழக்கில் கவுந்தப்பாடி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று சிறையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தங்கராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

அவருக்கு சிறை கைதிகள் வார்டில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.